வளி மாசடைவினால் நாட்டின் 8 மாவட்டங்களில் பாதிப்புக்கள்.. முகக்கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தல்…
Related Articles
கேகாலை மாவட்டத்தில் காற்றின் தரக்குறியீடு நேற்றைய தினம் குறைந்த மதிப்பீட்டில் இருந்த நிலையில் இன்று அதன் மதிப்பீடு 151 ஆக உயர்வடைந்துள்ளது. மோசமான தரக்குறியீட்டு பிரிவில் கேகாலை இணைக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. இலங்கையை பாதித்துள்ள வளி மாசடைவு காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாதிப்புக்கள் காணப்படுகின்றன. கேகாலை மாவட்டத்தில் வளி மாசடைவு நிலை 151 சுட்டியாக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினத்தில் 97 சுட்டியாக மாற்றமடைந்திருந்தது. குறித்த பிரதேசத்தில் தற்போதைய வளி மாசடைவினால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதோடு, ஒரு சில நோய் அபாயங்களை எதிர்கொண்டுள்ளனர். சுவாச நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் முகக்கவசங்களை அணியுமாறும், அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை மேலும் 8 மாவட்டங்களில் வளி மாசடைவு தொடர்பான தரக்குறீயிட்டு 100க்கும் குறைவாக தரக்குறியீட்டில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நேற்றைய தினத்தில் பதுளை மாவட்டத்தில் 89 ஆய காணப்பட்ட தரக்குறியீடு இன்றைய தினம் 140 ஆக அதிகரித்துள்ளது. கண்டி மாவட்;டத்தில் நேற்றைய தினம் 120ஆகவும் குருநாகல் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் 117 ஆகவும், கொழும்பில் 111 ஆகவும், ஹம்பாந்தோட்டையில் 106ஆகவும், யாழ்பாணம் மற்றும் எம்பிலிப்பிட்டிய ஆகிய பகுதிகளில் 103ஆகவும் வளியின் தர சுட்டி பதிவாகியுள்ளது.