ஈரான் அரசாங்கம் இவ்வருடத்தில் 500க்கும் மேற்பட்டவர்களை தூக்கிலிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் நோர்வேயை தளமாக கொண்ட ஈரான் மனித உரிமை குழு ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர்களில் நால்வருக்கு, இஸ்ரேலுக்கு உழவு பார்த்த குற்றத்திற்காக ஈரான் அரசாங்கத்தினால் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிலான அதிகபட்சமானோருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 2021ம் ஆண்டு 333 பேர் தூக்கிலிடப்பட்டனர்.
இதேவேளை நியாயமான விசாரணை நடத்தப்படாது, தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக குறித்த மனித உரிமை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.