சிரியாவின் பொருளாதார நெருக்கடிகளையடுத்து அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டங்களில்..
Related Articles
சிரியாவில் பொருளாதார நெருக்கடிகள், உச்சமடைந்துள்ளதையடுத்து அந்நாட்டு மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர். சிரியாவின் ஒரு சில பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருவதாகவும் ஸ்வீடா நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது பொலிஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகள் நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஷாத் பதவி விலக வேண்டுமெனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். அத்தோடு ஆர்ப்பாட்டக்காரர்களினால் நகரங்களிலுள்ள ஒரு சில கட்டிடங்களுக்கு தீ மூட்டப்பட்டு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரை இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சிரியாவின் தென் பகுதியிலுள்ள நகரிலுள்ள ஆளுநர் அலுவலகம் தாக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சட்டவிரோதமாக ஆளுநர் அலுவலகத்திற்குள் நுழைந்து உத்தியோகபூர்வ ஆவணங்களை எரித்து அழித்துள்ளதாக அந்நாட்டின் தேசிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்தை கைப்பற்றுவதற்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அதன் போது இடம்பெற்ற மோதலின் போது பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தி ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்படுமெனவும் சிரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.