முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசனுக்கு அந்நாட்டு பாராளுமன்றத்தினால் கண்டனம்
Related Articles
அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசனுக்கு அந்நாட்டு பாராளுமன்றத்தினால் கண்டனத்திற்கு உட்பட்டுள்ளார். முன்னாள் பிரதமரொருவர் இவ்வாறு கண்டனத்திற்குட்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்கொட் மொரிசன் பிரதமராக பதவி வகித்த காலப்பகுதியில் பல அமைச்சுக்களின் அதிகாரங்களை தம்வசம் வைத்திருப்பதற்கு முயற்சிகளை முன்னெடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த கண்டனத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அத்தோடு அவரின் செயற்பாடு அரசாங்கம் தொடர்பாக காணப்பட்ட நம்பிக்கையை சீர்குலைத்துள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் அவரது பிரதமர் பதவி இழக்கப்பட்ட நிலையில்,அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் சுகாதாரம், நிதி, திறைச்சேரி, உட்துறை மற்றும் வளத்துறை அமைச்சு ஆகியவற்றை ஒன்றிணைந்த அமைச்சாக முன்னெடுத்து சென்று, அவற்றின் அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கோ, அமைச்சரவைக்கோ அறிவிக்காமல் இரகசியமாக பேணியுள்ளார். ஸ்கொட் மொரிசனின் செயற்பாடுகளை அமைச்சர்கள் தெரிந்திருக்கவில்லையென அவர்களுக்கு நெருக்கமாணவர்கள் பாரிய விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். எனினும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக குறித்த தீர்மானத்தை மேற்கொண்டதாகவும், தனக்கெதிராக முன்னெடுக்கப்படும் பழிவாங்கல் செயற்பாடே இதுவெனவும் ஸ்கொட் மொரிசன் பதிலளித்துள்ளார்.