விவசாயத்துறை அமைச்சின் மேலதிக ஊழியர்களை வேறு நிறுவனங்களுக்கு சேவையில் இணைக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளார். செலவை முகாமைத்துவம் செய்வது தொடர்பான அரச கொள்கைகளை அடிப்படையாக கொண்டு விவசாயத்துறை அமைச்சின் மேலதிக ஊழியர்களை விரைவில் வேறு நிறுவனங்களுக்கு சேவையில் ஈடுபடுத்துமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீண்டகாலமாக விவசாயத்துறை அமைச்சில் பணியாற்றும் மேலதிக செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் அதிகாரிகள் வேறு நிறுவனங்களுக்கு இணைக்கப்படவுள்ளனர். அத்தோடு அமைச்சில் அபிவிருத்தி பிரிவு, நிர்வாக பிரிவு, கணக்காய்வு பிரிவு மற்றும் போக்குவரத்து பிரிவு என்பவற்றில் தலா மூன்று வெவ்வேறு பிரிவுகள் காணப்படுவதாகவும், அதனூடாக பெரும் எண்ணிக்கையிலான ஊழியர்கள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதோடு, கடமைகளின்போது பிரச்சினைகள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செலவை முகாமைத்துவம் செய்வது தொடர்பான அரச கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனை செயற்படுத்துவதில் பிரச்சினைகள் காணப்படுவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.