தலதா மாளிகையின் கட்டிடத்தொகுதிக்குள் தீ பரவல்
Related Articles
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் ஊடகப்பிரிவுக்குரிய கட்டிடத்தொகுதிக்குள் இன்று முற்பகல் தீ பரவியுள்ளது. அதன்போது ஊடகப்பிரிவுக்குரிய கணனிகள் சிலவற்றுக்கு சேதமேற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கண்டி மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரும், பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளனர். எனினும் தீயினால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும்வெளிப்படுத்தப்படவில்லை.
ஸ்ரீ தலதா மாளிகை ஊடகப்பிரிவின் கட்டிடத்தொகுதியானது, தலதா மாளிகையிலிருந்து பிரத்தியேகமாக காணப்படும் நிலையில், வேறு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.