மனித கடத்தலில் ஈடுபட்டு வந்த ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளராக இருந்த ஈ.குஷான் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓமானின் மஸ்கட்டில் இருந்து இன்று அதிகாலை 3.57 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இ.குஷான் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுற்றுலா விசாவில் ஓமனுக்கு வேலைக்குச் சென்ற பெண்களை ஆள் கடத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இ.குஷானை கைது செய்வதற்கான திறந்த பிடியாணையை குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றம் சாட்டப்பட்ட திரு. ஈ. குஷானின் சேவையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அவரது ராஜதந்திர பாஸ்போர்ட்டும் ரத்து செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட திரு.ஈ.குஷான் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் காவலில் வைக்கப்பட்டு வாக்குமூலம் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.