fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரசாங்க பணத்தை செலவிடுவதை நிறுத்துமாறு அறிவுறுத்தல்..

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 28, 2022 11:34

அரசாங்க பணத்தை செலவிடுவதை நிறுத்துமாறு அறிவுறுத்தல்..

அரச நிறுவனங்களின் திறப்பு விழா, பதவியேற்பு மற்றும் ஓய்வு தொடர்பான நிகழ்வுகள், சிநேகபூர்வ சந்திப்புகள் மற்றும் மாநாடுகள் உட்பட அனைத்து வகையான நிகழ்வுகளுக்கும் ,அரசாங்க பணத்தை செலவிடுவதை நிறுத்துமாறு நிதியமைச்சு, நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அமைச்சின் செயலாளர்கள், மாகாண சபை பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், அரச நிறுவன தலைவர்கள் மற்றும் அரச வங்கி தலைவர்களுக்கு சுற்றறிக்கை ,நிதி அமைச்சின் செயலாளரினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் சிலர் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் பொதுச் செலவில் ஓய்வு விழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பணத்திற்கு அவர்களே பொறுப்பு என்பதால், அந்த பணம் தவறாக பயன்படுத்தப்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


அரச தகவல் திணைக்களம்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 28, 2022 11:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க