பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது .
குறித்த நபர் 33 வயதுடையவர் எனவும் அவர் நீண்டகாலமாக குறித்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தமை தெரியவந்துள்ளது.