ஆறாவது தெற்காசிய கராத்தே சம்பியன்ஷிப் போட்டித் தொடர் கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டித் தொடரில் ஆறு நாடுகளைச் சேர்ந்த 280க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் போட்டியிடவுள்ளனர்.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 86 கராத்தே விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். போட்டித் தொடரை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தெற்காசிய கராத்தே சம்மேளனமும், இலங்கை கராத்தே சம்மேளனமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன.