நாட்டில் தற்போதைய காலப்பகுதியில் ஒரு வகை இன்புளுவென்சா நோய் தொற்று பரவி வருகிறது. அதன் அபாயத்தை குறைக்க குழந்தைகளின் போசாக்கு விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆயூர்வேத வைத்திய சங்கத்தின் சமூக சுகாதார செயலாளர் வைத்தியர் சேனக்க கமகே இது தொடர்பில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். குறித்த இன்புளுவென்சா வைரஸ் மற்றுமொருவருக்கு பரவுவதை தடுக்க வேண்டும். கடந்த காலங்களில் கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கென அனைவரும் செயற்பட்டதை போன்றே தற்போதும் செயற்பட வேண்டும்.
முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடிப்பது சிறந்ததாகும். இதனிடையே குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான உணவு வகைகளை அவர்களுக்கு வழங்குவது அவசியமாகும். கிழங்கு வகைகள், கீரை , கஞ்சி வகைகள், பழங்கள் என்பவற்றை முடிந்தளவு குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். பிள்ளைகளின் போசனை மட்டம் தொடர்பிலகூடுதல் கவனம் செலுத்த வேண்டியது பெற்றோரின் கடமையாகும். பிள்ளைகளுக்கு போசனை குறைப்பாடு ஏற்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி குறையுமாயின் நோய் தொற்று பரவும் வீதமும் அதிகரிக்குமென ஆயூர்வேத வைத்திய சங்கத்தின் சமூக சுகாதார செயலாளர் வைத்தியர் சேனக்க கமகே தெரிவித்துள்ளார்.