ஏற்றுமதியினூடாக ஈட்டப்படும் டொலர் வருமானத்தை ரூபாவாக மாற்றாத வர்த்தகர்கள் மற்றும் அவர்கள் ஈட்டிய வருமானம் குறித்த தகவல்கள் நாட்டுக்கு வெளிப்படுத்தப்படுமென மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ஆடை ஏற்றுமதியாளர்களின் 40வது வருடாந்த சம்மேளனத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மத்திய வங்கியின் ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதுவரை நாட்டை ஆட்சிசெய்த அரசாங்கங்கள் வரவு செலவு திட்டத்தில் பாரிய இடைவெளியுடன் நாட்டை நிர்வகித்த நிலையில், குறித்த செயற்பாடுகள் காரணமாகவே பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
வரவு செலவு திட்டத்தில் துண்டுவிழும் தொகையை நிரப்புவதற்காக பெருமளவு கடனை பெற்றுக்கொள்ளவேண்டிய சூழல் காணப்பட்டதாகவும், அதானூடாக நாட்டை நிர்வகிக்க முடியாத சூழல் ஏற்பட்டதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.