தென்னாபிரிக்காவில் சம்பள அதிகரிப்பை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கானோர் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 8 இலட்சம் அரச ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களானது அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவுக்கேற்ப சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறிப்பாக , அரசாங்கம் மூன்று சதவீத சம்பள அதிகரிப்பை வழங்கிய நிலையில், அதிகரித்துவரும் பணவீக்கத்திற்கேற்ப 10 சதவீத சம்பள அதிகரிப்பை தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன. இந்நிலையில் அரசாங்கத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாகவும் அந்நாட்டு தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.