வருமான வரி திருத்த சட்டமூலம் அரசியல் யாப்புக்கு உட்பட்டதென உச்சநீதிமன்றம் வியாக்கியானம்…
Related Articles
தேசிய வருமான வரி திருத்த சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் தொடர்பில் உச்சநீதிமன்றம் தனது வியாக்கியானத்தை பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, உச்சநீதிமன்றத்தின் அறிவிப்பை பாராளுமன்றத்தில் வெளியிட்டார். சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர் சட்டமா அதிபர் உச்சநீதிமன்றத்திற்கு வழங்கிய திருத்தங்கள் உள்வாங்கப்படவேண்டுமென உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இதன்மூலம் தேசிய வருமான வரி திருத்த சட்டமூலம் தொடர்பில் யாப்பு ரீதியிலான குளறுபடிகள் தோன்றாதென உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார்.
இதேவேளை வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்றும் பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது.