நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் பொருத்தமான வேலைத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அந்த வேலைத்திட்டங்கள் அனைத்தையும் வார்த்தைகளில் மட்டுமன்றி நடைமுறையிலும் நடைமுறைப்படுத்துவது இன்றியமையாதது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை மத்திய வங்கி வளாகத்தில் இன்று நடைபெற்ற வரவு செலவுத்திட்டத்தின் பின்னரான மீளாய்வு மாநாட்டில் மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்