நவகத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிமெட்டியாவ பிரதேசத்தில் வயல் வெளியிலிருந்த நபர் ஒருவர் மின்னல் தாக்கத்திற்கு உட்பட்டு உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் மின்னல் தாக்கத்தினால் பலத்த காயமடைந்த நிலையில் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வயல்வெளியில் வேலை செய்துக்கொண்டிருந்த போதே மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து 1990 அவசர எம்பியூலன்ஸ் சேவையினூடாக மின்னல் தாக்கத்திற்கு இலக்கானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்த நபரின் மனைவியும் மின்னல் தாக்கத்தினால் எரிகாயங்களுக்கு உட்பட்ட நிலையில் ஆபத்தான நிலையில் உள்ளதாக வைத்தியசாலை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மின்னல் தாக்கத்திற்கு உட்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
படிக்க 0 நிமிடங்கள்