டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலோன் மஸ்க் 3.9 பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அவரது சொத்து மதிப்பு குறைவடைந்துள்ளதாகவும், அமெரிக்க நிதி கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு எலோன் மஸ்க் கொள்வனவு செய்ததாக செய்திகள் வெளியாகி இரண்டு வாரங்களுக்குள் டெஸ்லா பங்குகளின் மதிப்பு குறைவடைந்துள்ளது. டெஸ்லா இலத்திரனியல் கார்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை மீள பெறப்பட்டுள்ளன. அவற்றில் காணப்படும் குறைப்பாடுகளினால் அவை மீள பெறப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கடந்த வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனை தொடர்பான விபரங்கள் வெளியாகாத நிலையில், அண்மைக்கால விற்பனைகளினூடாக பெறப்பட்ட 20 பில்லியன் டொலர்களை கொண்டு டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை எலோன் மஸ்க் கொள்வனவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இதேவேளை கடந்த ஏப்ரல் மாதமளவில் 8.5 பில்லியன் டெஸ்லா பங்குகளையும், ஓகஸ்ட் மாதத்தில் 7 பில்லியன் பங்குகளையும் எலோன் மஸ்க் விற்பனை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.