கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களுடன் சந்தேகத்தின் பேரில் அறுவர் கைது..
Related Articles
மட்டக்களப்பு கல்குடா,சந்திவெளி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் குழுக்களாக செயல்பட்டு சூட்சுமமாக களவாடப்பட்ட . சுமார் 10 லட்சம் பெறும தியான வீட்டு பாவனை பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஆறு இளைஞர்களும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இந்த சம்பவம் தொடர்பில் 24 தொடக்கம் 15 வயதுக்குட்பட்ட கல்குடா வாழைச் சேனை பிரதேசங்களைச் சேர்ந்த அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர் . பொலிசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் நடத்தப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்விதம் களவாடப்பட்ட வீட்டு பாவனைப் பொருட்களான . நீர் பம்பிகள் ,மோட்டார் சைக்கிள் ஒன்றும் துவிச் சக்கர வண்டிகள் தொலைக் காட்சி பெட்டி , மடிக்கணினி உட் பட சுமார் பத்து லட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டு பாவனை பொருட்களும் பொ லீசாரால் மீட்கப்பட்டுள்ளன இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அறுவரையும் வாழச்சேனை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கு கல்குடா பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.