ஐரோப்பாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான ரஷ்யாவின் அஷுர் விமான நிறுவனம் இலங்கையுடன் விமான சேவைகளை ஆரம்பித்துள்ளது. முதலாவது விமானத்தில் 335 சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருகைத்தந்துள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். இன்று முதல் வாரந்தோறும் இலங்கைக்கும், ரஷ்யாவுக்குமிடையில் 7 விமான சேவைகள் இடம்பெறவுள்ளன. அஷுர் விமான நிறுவனம் ரஷ்யாவிலுள்ள 7 நகரங்களிலிருந்து இலங்கைக்கு விமான சேவையை நடத்தவுள்ளது. வாரமொன்றுக்கு இரண்டாயிரத்து 200 ரஷ்ய சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருகைத்தருவார்களென எதிர்ப்பார்ப்பதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாளை முதல் எயார் பிரான்ஸ் நிறுவனத்தின் விமான சேவையும் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 10ம் திகதி முதல் சுவிஸ் தேசிய விமான சேவையும் இலங்கையுடனான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.