டி டுவண்டி உலக கிண்ண தொடரில் இன்றைய தினம் குழு ஒன்றை சேர்ந்த இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் ஒன்றை ஒன்று எதிர்க்கொண்டுள்ளன. பிஸ்பேர்னில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து ஆப்கானிஸ்தான் அணியினர் 144 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். ரஹ்மானுல்லா குர்பாஸ் 28 ஓட்டங்களையும், உஸ்மான் காஹ்னி 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் வணிந்து ஹசரங்க 3 விக்கட்டுக்களையும், லகிறு குமார 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர். ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயித்த 145 ஓட்டங்களை வெற்றியிலக்காக நோக்கி இலங்கை அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.

ஆப்கானிஸ்தான் அணியிடமிருந்து இலங்கை அணிக்கு 145 ஓட்டங்கள் வெற்றியிலக்கு..
படிக்க 1 நிமிடங்கள்