fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அட்டமஸ்தானாதிபதி பல்லேகம சிறினிவாச தேரர் இயற்கை எய்தியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 19, 2022 14:46

அட்டமஸ்தானாதிபதி பல்லேகம சிறினிவாச தேரர் இயற்கை எய்தியுள்ளார்.

வடக்கு, மத்திய பிரிவுகளுக்கு பொறுப்பான பிரதான சங்கநாயக்கர் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம சிறினிவாச தேரர் இயற்கை எய்தியுள்ளார். அவரது தேகம் இன்றைய தினம் அனுராதபுரத்திற்கு எடுத்துச்செல்லப்படவுள்ளது. அட்டமஸ்தானாதிபதியின் தேகம் தொடர்பான இறுதிக்கிரியைகளை பூரண அரச மரியாதையுடன் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறித்த செயற்பாடுகளுக்கென வடமத்திய மாகாண ஆளுநர் மற்றும் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் தலைமையில் குகுழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. மாத்தளை தம்புல்ல பல்லேகம கிராமத்தில் 1953ம் ஆண்டு ஜனவரி மாதம் பிறந்த பல்லேகம சிறினிவாச தேரர் 1968ம் ஆண்டு துறவரம் பூண்டார். மகா விகாரை பிரிவெனாவில் பிக்கு கல்வியை ஆரம்பித்த தேரர் மாளிகாகந்த வித்யோதயா மகா பிரிவெனாவிலும் கல்வியை தொடர்ந்தார். களனி பல்கலைக்கழகத்தின் முதுநிலை பட்டப்படிப்பை நிறைவுசெய்தார். ருவான்வெலி மகாசாயவின் பதில் விகாராதிபதியாகவும் செயற்பட்டுள்ள தேரர், மிரிஸ்வெட்டிய விகாரையிலும் விகாராதிபதியாக செயற்பட்டுள்ளார். அபேகிரிய விகாரையின் பதில் விகாராதிபதியாக செயற்பட்ட அவர், ருவாவெளி சைத்யாதிகாரியாக1995ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் 1997ம் ஆண்டு வடக்கு, மத்திய பிரிவுகளுக்கு பொறுப்பான பிரதான சங்கநாயக்கர் அட்டமஸ்தானாதிபதியாக பல்லேகம சிறினிவாச தேரர் தெரிவானார். இந்நிலையில் திடீர் நோய்நிலைமை காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சைப்பெற்று வந்த அவர் நேற்று இரவு இயற்கை எய்தினார். அவரது இறுதிக்கிரியைகள் அரச மரியாதையுடன் இடம்பெறவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 19, 2022 14:46

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க