fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

போலி ஆவணங்கள் தயாரித்து காரை விற்பனை செய்ய முயற்சித்த நபர்கள் கைது..

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 14, 2022 14:22

போலி ஆவணங்கள் தயாரித்து காரை விற்பனை செய்ய முயற்சித்த நபர்கள் கைது..

70 லட்சம் ரூபா பெறுமதியான காரொன்றை , 25 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முற்பட்ட சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, காரை விற்பனை செய்யும் முயற்சி நடைபெற்றுள்ளது. பானந்துரை வளான குற்றத்தடுப்பு பிரிவினர் , சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளனர். சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு போலி ஆவணங்களை தயாரித்து, அதை விற்பனை செய்ய சந்தேக நபர்கள் முயற்சித்துள்ளனர். குறித்த காரை கொள்வனவு செய்வது போன்று நடித்து, பொலிசார் மோசடியை முறியடித்துள்ளனர். பாரியளவில் வாகனங்களை இறக்குமதி செய்யும் பெஹெலியகொட பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரே மோசடியின் பிரதான சூத்திரதாரி என ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 14, 2022 14:22

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க