மினுவாங்கொடை முத்தரப்பு கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
அண்மையில் மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தந்தை மற்றும் இரண்டு மகன்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் பலரும் கைது செய்யப்பட்டிருந்தனர் .
எனினும் பிரதான சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
ஜயகொடகே சஞ்சீவ டோன சஞ்சீவ லக்மால் எனும் 39 வயதான நபர் , ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, மஹிந்தராம வீதியை சேர்ந்தவர்.
இவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் கீழ்கண்ட தொலைபேசி எண்களுக்கு அறிவிக்கலாம் .
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கம்பஹா – 0718591608
உதவி பொலிஸ் அத்தியட்சகர் கம்பஹா – 0718591610
நிலைய கட்டளைத் தளபதி மினுவாங்கொடை – 0718591612