இரட்டை கொலையுடன் தொடர்புபட்ட 64 வயதுடைய பெண் ஒருவரை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர் .
கடந்த 1991 ஆம் ஆண்டு நாவின்ன மற்றும் பாணந்துறையில் வசித்த தந்தை மற்றும் மகன் இருவரும் கொல்லப்பட்டமை தொடர்பில் பொலிஸ் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் பின்னர், இரட்டைக் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் 2022 செப்டம்பர் 29 அன்று கைது செய்யப்பட்டார்.
பின்னர், கடந்த வெள்ளிக்கிழமை இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக வாதுவ பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய மற்றொரு சந்தேக நபரை அதிகாரிகள் கைது செய்தனர். சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை அடுத்து, பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் சந்தேகநபர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட முதலாவது சந்தேக நபரின் மனைவியாவார்.
இறந்தவருக்குச் சொந்தமான 12 பேர்ச்சஸ் காணியை சுவீகரிப்பதற்காகவே இந்தக் கொலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த தந்தையின் இரண்டாவது மகனின் மனைவி பொலிஸ் மா அதிபரிடம் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.