நாட்டிலுள்ள சகல மிருககாட்சிசாலைகளிலும் இம்முறை நாள் ஒன்றில் கிடைக்கப்பெற்ற அதிகப்பட்ச வருமானம் சர்வதேச சிறுவர் தினத்தன்று பதிவாகியுள்ளது.
சர்வதேச சிறுவர் தினம் ஒக்டோபர் முதலாம் திகதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் 50 இலட்சத்து 82 ஆயிரத்து 377 ரூபா வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது. பின்னவள யானைகள் சரணாலயத்தில் அன்றைய தினம் 9 இலட்சத்து 47 ஆயிரம் ரூபா வருமானமாக கிடைக்கப்பெற்றது. பின்னவல மிருககாட்சிசாலையை 9 இலட்சத்து 49 ஆயிரத்து 200 ரூபாவும், ரிதியகம ஷபாரி பூங்காவில் 8 இலட்சத்து 56 ஆயிரம் ரூபாவும் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.
இது குறித்து தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் இது தொடர்பில் அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கு அறிவித்துள்ளது. சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் சிறுவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்;ட முதியவர்களுக்கு இலவசமாக மிருககாட்சிசாலைகளில் நுழைய அனுமதி வழங்கியிருந்தது.