மியன்மாரில் இன்று அதிகாலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. மியன்மாரின் வடமேற்கே 162 கிலோ மீற்றர் தொலைவில் இன்று அதிகாலை 3.52 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தினால் குறித்த பகுதியிலுள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இலேசாக குலுங்கியுள்ளன. இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.