கடந்த தசாப்தத்தில் விமான சேவையின் சகல பிரிவுகளும் 4.5 வீத வளர்ச்சியை எட்டியுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கெனடாவின் மொண்ட்ரியல் நகரில் இடம்பெறும் சர்வதேச விமான சேவை சங்கத்தின் 41வது அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 194 நாடுகளின் பிரதிநிதிகள் அமர்வில் பங்கேற்றுள்ளனர். நேற்று முன்தினம் ஆரம்பமான அமர்வு எதிர்வரும் 7ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
2021ம் ஆண்டு கொவிட் பரவல் உச்சக்கட்டத்தில் இருந்ததால் பொதுமக்களின் வாழ்வாதார முறை பாதிக்கப்பட்டது. இதனால் பாரிய பொருளாதார இழப்புக்கள் ஏற்பட்டதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டினார். குறித்த நிலை போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறையையும் பாதித்தது. எனினும் இவ்வாறான பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் சிவில் விமான சேவைகள் துறை வழமைக்கு திரும்பியுள்ளமை மகிழ்ச்சிக்குரியதென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார். இதேவேளை அமைச்சருடன் கெனடாவுக்கான இலங்கை தூதுவர் ஹர்ஷ நவரத்னவும் அமர்வில் கலந்துகொண்டார்.