அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹரிஸ் தென்கொரியாவுக்கு விஜயம் செய்துள்ளார். வடகொரியா இரு பெலஸ்டிக் ஏவுகணைகளை பரிசோதனை செய்த மறுநாள் அமெரிக்க உப ஜனாதிபதி தென்கொரியா பயணித்துள்ளார். அமெரிக்காவும், தென்கொரியாவும் இணைந்து மேற்கொண்ட இராணுவ பயிற்சிகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே வடகொரியா பெலஸ்டிக் ஏவுகணைகளை பரிசோதித்தது. இவ்வாறான சூழலில் அமெரிக்க உப ஜனாதிபதியின் தென்கொரிய விஜயம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதேவேளை அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹரிஸ், வடகொரிய – தென்கொரிய எல்லைப்பகுதிக்கும் விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.