fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஜப்பான் பிரதமருக்குமிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று..

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 28, 2022 12:52

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஜப்பான் பிரதமருக்குமிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று..

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இன்றைய தினம் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்தோடு இன்றைய தினம் ஜப்பான் பேரரசர் நருஹிடோவையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இன்றைய தினத்துடன் ஜப்பானுக்கான இரண்டு நாள் விஜயம் நிறைவடையவுள்ளது. இந்நிலையில் ஜப்பான் விஜயத்தை நிறைவுசெய்யும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் இடம்பெறவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கிகளின் ஆளுநர்கள் கூட்டத்தில் தலைமை ஏற்பதற்காக பயணிக்கவுள்ளார். பிலிப்பைன்ஸ் விஜயத்தின்போது ஆசிய அபிவிருத்தி வங்கியின் தiலைவர் மசட்சுகு அசகாவாவுடன் கலந்துரையாடல்களில் ஜனாதிபதி ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 28, 2022 12:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க