பல்வேறு கொலை சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் ராகம பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கைகுண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபருக்கு எதிராக வெலிசர, நீர்கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையிலுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ராகம பிரதேசத்தில் 3 வீடுகளுக்குள் நுழைந்து கூரிய ஆயுதங்களால் தாக்குதல்களை மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் 3 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்தோடு மினுவாங்கொட மற்றும் எல்பிட்டிகல பிரதேசங்களில் இரண்டு துப்பாக்கி பிரயோகங்களை மேற்கொண்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் சந்தேக நபருக்கு எதிராக காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.