கனடாவின் கிழக்கு பகுதியில் பியோனா சூறாவளியினால் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில் உதவி மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக கடனா படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். கிழக்கு கனடாவின் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்பட்ட சேத விபரங்களை அதிகாரிகள் மதிப்பிட்டு வருகின்றனர். கெரிபியன் பகுதியிலிருந்து ஆரம்பித்த பியோனா சூறாவளி கனடாவின் நோவா ஸ்கொட்டியா, ப்ரின்ஸ் எட்வட் தீவு, நிவ்பவுன் லேண்ட் மற்றும் கிவ் பெக் ஆகிய பகுதிகளை தாக்கியது. வீதிகளில் முறிந்து வீழ்ந்துள்ள மரங்களை அகற்றுவதற்கும், போக்குவரத்து நடவடிக்கைகளை மீள வழமைக்கு கொண்டுவருவதற்கும், கனடா படையினர் உதவிகளை வழங்குவார்களென அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் அணித்தா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

கனடாவின் கிழக்கு பகுதியில் பியோனா சூறாவளியினால் பாதிப்பு
படிக்க 1 நிமிடங்கள்