உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இனிப்பு வகைகளின் விலையை 10-13 வீதத்தால் குறைக்க இலங்கை இனிப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.டி. சூரியகுமார இது குறித்து தெரிவித்துள்ளார். இரண்டு பிரதான மூலப்பொருட்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், சந்தையில் இனிப்பு வகைகளின் விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.