38 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து புதைபடிவமான மீனின் இதயத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு, ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் நிகழ்ந்துள்ளது
பொதுவாக, மென்மையான திசுக்களை விட எலும்புகள்தான் புதைபடிவங்களாக மாறுகின்றன. ஆனால் ஆஸ்திரேலியாவின் கிம்பர்லியில் உள்ள இந்த பகுதியில், கல்லீரல், வயிறு, குடல் மற்றும் இதயம் உட்பட மீனின் உள் உறுப்புகளில் பலவற்றைப் தாதுக்கள் பாதுகாத்துள்ளன. இதனை ‘கோகோ பாறை உருவாக்கம்’ என்று அழைக்கப்படுகிறது.
கோகோ மீன் என்பது பிளாகோடெர்ம்ஸ் (placoderms) எனப்படும் வரலாற்றுக்கு முந்தைய மீன் வகைகளில் முதன்மையானது. இவை தாடைகள் மற்றும் பற்கள் கொண்ட முதல் மீன்கள். அவற்றிற்கு முன், மீன்கள் 30 செ.மீ.க்கு மேல் பெரிதாக இல்லை. ஆனால் பிளாக்கோடெர்ம்கள் 29.5 அடி (9மீ) நீளம் வரை வளரக்கூடியவை.
பிளாகோடெர்ம்கள் என்பது 6 கோடி ஆண்டுகளாக நமது புவியில் ஆதிக்கம் செலுத்தும் உயிரினங்களின் வடிவமாக இருந்தன. பூமியில் முதல் டைனோசர்கள் நடமாடுவதற்கு 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இவை இருந்தன.
கோகோ மீன் புதைபடிவத்தின் ஸ்கேன் இந்த பழமையான மீன்களின் இதயம் எதிர்பார்த்ததை விட மிகவும் சிக்கலானது என்பதைக் காட்டுகிறது.
இது மனித இதயத்தைப் போன்ற அமைப்பில், ஒன்றின் மேல் ஒன்றாக இரண்டு இதய அறைகளைக் கொண்டிருந்தன. இந்த இதயம் மிகவும் திறம்பட இயங்கக்கூடியதாகவும், மெதுவாக நகரும் மீனில் இருந்து வேகமாக நகரும் வேட்டையாடும் உயிரினமாக மாற்றும் முக்கியமான படியாகவும் இருந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.