ஆசிய கிண்ண தொடரின் இறுதி போட்டி துபாயில் இன்று இரவு 07.30 மணிக்கு இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது . இதற்கு முன்னதான ஆசிய கிண்ணப்போட்டிகளில் இலங்கை அணி ஐந்து தடவைகளும் பாக்கிஸ்தான் அணியானது இரண்டு தடவைகளும் கிண்ணத்தை வென்றுள்ளது. எனவே இன்றைய போட்டியானது இரண்டு அணிகளுக்கிடையிலும் சவாலான போட்டியாகவே அமையவுள்ளது .போட்டி தொடர்பான நேரலை நிகழ்வுகளை வசந்தம் தொலைக்காட்சியில் கண்டு மகிழலாம்.