fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாடலாசிரியரின் மகள் தற்கொலை

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 10, 2022 13:25

பாடலாசிரியரின் மகள் தற்கொலை

“தில்”  திரைப்படத்தில்  இடம்பெற்ற “உன் சமையலறையில்”  என்ற பாடலின் மூலம் ஓர் பாடலாசிரியராக திரைபிரவேசம் செய்த கபிலன் அவர்களின்  மகள்  தூரிகை,  சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவர் முன்னணி ஆங்கில ஊடகத்தில் எழுத்தாளராகவும் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் (Being Women Magazine ) என்ற இணைய இதழைத் தொடங்கி அதில் பெண்கள் சம்பந்தமான விழிப்புணர்வு கட்டுரைகளையும் தூரிகை எழுதி வந்துள்ளார் . அத்துடன் (The label keera) எனும் ஆடை வடிவமைப்பகத்தையும் அவர் நடத்தி வந்துள்ளார் . பல்துறையிலும் திறமாக இயங்கி வந்த தூரிகை திடீரென தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியானதே. அத்துடன் திருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் தூரிகை தற்கொலை செய்துக்கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் காணப்படுகின்றனவா ? என்ற ரீதியிலும் மரணவிசாரணை இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 10, 2022 13:25

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க