அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ரூட்
Related Articles
நியூயார்க் நகரில் நடந்து வரும்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதி சுற்று போட்டியில் நோர்வேயின் Casper Rudd), ரஷிய வீரர் (Karen Khachanov) உடன் மோதினார்.
இந்த போட்டியில் முதல் இரு செட்களை ரூட் கைப்பற்றினார். மூன்றாவது செட்டை கச்சனோவ் வென்றார். நான்காவது சுற்றை ரூட் மீண்டும் கைப்பற்றி அசத்தினார். இறுதியில், காஸ்பர் ரூட் 7-6, 6-2, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் கச்சனோவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.