கனடாவில் அடுத்தடுத்து அரங்கேறிய கத்திக்குத்து.
Related Articles
கனடாவின் ரெஜினா மாகாணம், ஜேம்ஸ் ஸ்மித் கிரீ நேசன் மற்றும் வடக்கு சஸ்காடூனில் உள்ள வெல்டன் கிராமத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவங்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு இடங்களில் மர்ம நபர்கள் நடத்திய இந்த தாக்குதல்களில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 15 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 2 பேர் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.