இந்தியாவின் சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 31-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
டாக்டர் பட்டம் பெற்றயுவன் ஷங்கர் ராஜாவுக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 1997-ஆம் ஆண்டு வெளியான ‘அரவிந்தன்’ படத்தின் மூலம் சினித்துறையில் இசையமைப்பாளராய் அறிமுகமாகிய யுவன் இதுவரையில் 100 ற்கும் மேற்பட்ட திரைப்படங்களிற்கு இசையமைத்துள்ளார் .