8 வயது பிள்ளையை கால்வாயில் வீசிய கிராம சேவகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொல்கஹவெல உடபொல பகுதியை சேர்ந்த கிராம சேவகரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குழந்தை கால்வாய் கட்டிலிருந்து யானை குளிப்பதை கண்டுகளித்துள்ளது. குறித்த சந்தர்ப்பத்தில் குடிபோதையில் இருந்த கிராம சேவகர் குழந்தையை தூக்கி கால்வாய்க்குள் வீசியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவத்தில் குழந்தைக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதேவேளை கைதுசெய்யப்பட்ட கிராம சேவகரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

8 வயது பிள்ளையை கால்வாயில் வீசிய கிராம சேவகர் ஒருவர் கைது..
படிக்க 0 நிமிடங்கள்