சிறுவர் அபிவிருத்தி மத்திய நிலையத்திற்கென தேசிய வழிகாட்டி மற்றும் குறைந்தப்பட்ச தரநிலையை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சட்டபிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் சிறுவர்களின் பாதுகாப்பு உடல் மற்றும் உளநலனை உறுதி செய்வதற்கென நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்கத்தின் மேற்பார்வையின் கீழ் சிறுவர் அபிவிருத்தி சேவைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சிறுவர் அபிவிருத்தி மத்திய நிலையத்திற்கென தயாரிக்கப்பட்ட வழிகாட்டி மற்றும் சட்டம் மாகாண மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட போதும் தேசிய மட்டத்தில் அது பயன்படுத்தப்படாமை தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. அதற்கமைய நாட்டின் சிறுவர் அபிவிருத்தி மத்திய நிலையங்களுக்கென தேசிய வழிகாட்டி மற்றும் குறைந்தப்பட்ச தரநிலைக்கென முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இது தொடர்பான யோசனையை அமைச்சரவையில் சமர்பித்தார்.

சிறுவர் அபிவிருத்தி மத்திய நிலைய தேசிய வழிகாட்டி மற்றும் குறைந்தப்பட்ச தரநிலையை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி
படிக்க 1 நிமிடங்கள்