கொரோனா வைரஸூக்கு எதிரான இரட்டை தடுப்பூசியை பயன்படுத்த பிரித்தானியா அனுமதி வழங்கியுள்ளது. ஒரே சந்தர்ப்பத்தில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தக்கூடிய இரட்டை செயற்பாட்டுடன் கூடிய தடுப்பூசிக்கு அனுமதி வழங்கிய முதல் நாடாக பிரித்தானியா அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. சாதாரண கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரோன் திரிபுக்கு எதிராக குறித்த தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. மொடோர்னா நிறுவனம் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. தடுப்பூசியானது பாதுகாப்பனதும், சிறந்த தரத்தையுடையதென்பதோடு, செயற்திறனை கொண்டுள்ளதால் பொதுமக்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது.
கொரோனா வைரஸூக்கு எதிரான இரட்டை தடுப்பூசியை பயன்படுத்த பிரித்தானியா அனுமதி
படிக்க 0 நிமிடங்கள்