லொறிகளில் எரிபொருளை பெற்று விற்பனையில் ஈடுபடும் வர்த்தகம் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். மேல் மாகாண புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பஸ்யால பட்டலிய பிரதேசத்தில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. லொறி சாரதிகளிடம் எரிபொருளை பெற்று அதனை விற்பனை செய்யும் செயற்பாடு கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டு வந்தமை தெரியவந்துள்ளது. 350 லீட்டர் டீசலுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதாக பல்லேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட எரிபொருளை அத்தனகல நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லொறிகளில் எரிபொருளை பெற்று விற்பனையில் ஈடுபடும் வர்த்தகம் தொடர்பில் பொலிஸார் தகவல்..
படிக்க 0 நிமிடங்கள்