பல்வேறு திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வெலிவேரிய பொலிஸ் நிலைய அதிகாரிகளால் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து திருட்டு சம்பவங்கள் தொடர்பில் தெரியவந்தது. அதற்கமைய அதனுடன் தொடர்புடைய மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஜா-எல, பியகம, கடவத்தை, களனி, யக்கல், மாபாகே, கோட்டை, பேலியகொட, மீகாவத்தை, ராகம மற்றும் வெலிவேரிய ஆகிய பிரதேசங்களில் சந்தேக நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருடப்பட்ட இரு முச்சக்கரவண்டிகள், 10 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 11 துவிச்சக்கரவண்டிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. தண்ணீர் மோட்டார் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் வெலிவேரிய, கம்பஹா மற்றும் பலாங்கொட ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களாகும். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.