அரச செலவீனங்களை மேலும் கட்டுப்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டு அரச செலவீனங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. திறைசேரி வழங்கியுள்ள ஆலோசனைகளை பின்பற்றுமாறு அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அரச தரப்பிலிருந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய கட்டிடங்களை வாடகைக்கு பெற்றுக்கொள்வது, குத்தகை ஒப்பந்தங்களை மேற்கொள்வது உள்ளிட்ட செயற்பாடுகளை தவிர்க்குமாறும், வாகனங்களை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பங்களில் திறைசேரியின் அனுமதியை பெறவேண்டுமெனவும் புதிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச செலவீனங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட சுற்றறிக்கை
படிக்க 0 நிமிடங்கள்