சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் மஹரகம தேசிய இளைஞர் நிலையத்தில் காலை முதல் இரவு வரை பல விசேட இளைஞர் தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன.
500 இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் இளைஞர் முகாம் ஒன்றும், பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளும் நாள் முழுவதும் நடைபெறும் என தேசிய இளைஞர் சேவை மன்றம் தெரிவித்துள்ளது.
இதன் பிரதான வைபவம் இன்று பிற்பகல் அமைச்சர் ரொஷான் ரணசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது. சர்வதேச இளைஞர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 அன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி குறித்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.