பாகிஸ்தான் போர்கப்பலான தைமூர் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை..
Related Articles
பாகிஸ்தான் போர்கப்பலான தைமூர் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. சீன கப்பலின் இலங்கை வருகை, சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், பாகிஸ்தான் போர்க்கப்பல் கொழும்பை வந்தடைந்துள்ளது. தைமூர் போர்க்கப்பல் அதிவேக தாக்குதல் மற்றும் ஏவகணைகளை ஏவக்கூடிய வசதிகளைக் கொண்டதென தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் திங்கட்கிழமை கப்பல் மீண்டும் பாகிஸ்தானுக்கு பயணிக்கவுள்ளது. தைமூர் போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதருவதற்கு முன்னர் பங்களாதேஷ் ச்சிட்டகொங் துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி கோரியிருந்தது. எனினும் பங்களாதேஸ் பிரதமர் அனுமதி வழங்கவில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன.