அரச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தினால் புதியவகை நெல் அறிமுகம்..
Related Articles
அரச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தினால் புதியவகை நெல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. A.T. 378 எனும் புதிய வெள்ளை பச்சையரிசிக்கான நெல் வகையே அறிமுகம் செய்யப்படுவதாக நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிப்பணிப்பாளர் ஹர்சினி சிறிவர்தன தெரிவித்துள்ளார். புதிய நெல் ஏக்கருக்கு 180 புசல் விளைச்சலை தரக்கூடியதென அவர் குறிப்பிட்டுள்ளார். நெல் பயிரிடப்பட்டு மூன்றரை மாத காலப்பகுதிக்குள் அறுவடை செய்ய முடியும். 13 வருட காலமாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் பயனாக புதிய நெல் இனம் அறிமுகம் செய்யப்படுவதாக அம்பலாந்தோட்ட நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிபணிப்பாளர் ஹர்சினி சிறிவர்தன தெரிவித்துள்ளார்.