இன்று உலக யானைகள் தினமாகும்..
Related Articles
யானைகளை பாதுகாக்க சர்வதேச ரீதியான வேலைத்திட்டம் அவசியமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இன்று உலக யானைகள் தினமாகும். இதனை முன்னிட்டு இலங்கையிலும் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். ‘வரலாற்று சிறப்புமிக்க அழகு மற்றும் சுற்றாடலின் முக்கியத்துவம்’ எனும் தொனிப்பொருளில் இம்முறை யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. யானைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவற்றை பாதுகாக்கவும் சர்வதேச நாடுகள் பல திட்டங்களை முன்னெடுத்துள்ளன.
இலங்கையில் யானை – மனிதன் பிரச்சினை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் சர்வதேச ரீதியான அனுபவங்களையும் பெற்று பிரச்சினைகளுக்கு தீர்வு தயாரிக்கப்படுமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். யானைகளை பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், யானைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் திட்டங்கள் வகுக்கப்படும். யானைகளின் வாழ்விடங்களை மனிதன் அழித்தமையே அவை கிராமங்களுக்குள் நுழைய காரணமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.