சட்டவிரோதமாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 19 ஆயிரம் லீற்றர் டீசலுடன் நால்வர் கைது..
Related Articles
கூடுதல் விலையில் விற்பனை செய்யும் நோக்கில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒருதொகை டீசல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை மீனவ துறைமுகத்திற்கருகில் குறித்த டீசல் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததாகவும், கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினர் அதனை கைப்பற்றியுள்ளனர்.
19 ஆயிரம் லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டதோடு, நான்கு சந்தேக நபர்களும் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ள நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த டீசல் தொகை வெல்லவாய, பெலவத்தை பிரதேசத்திற்கு மீன் ஏற்றிச்செல்லும் லொறியில் எடுத்துச்செல்லப்படவிருந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. கைப்பற்றப்பட்ட டீசல் ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் ஹம்பாந்தோட்டை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.