ஜனாதிபதிக்கும், எதிர்கட்சித் தலைவருக்கும் இடையில் இன்று சந்திப்பு..
Related Articles
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகளுக்கிடையில் இன்று சந்திப்பு இடம்பெறவுள்ளது. பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்தல் மற்றும் அதற்கான யோசனைகள் தொடர்பில் இணக்கப்பாட்டை எட்டுவதற்காக ஜனாதிபதியும், எதிர்கட்சித் தலைவரும் கலந்துரையாடவுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் மேலும் சில கட்சிப் பிரதிநிதிகளை நேற்றைய தினமும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று கலந்துரையாடினர்.